"சிரிப்புக்கு பஞ்சமிருக்காது" -'மதகஜராஜா' ரிலீஸ் குறித்து நடிகர் விஷால் நெகிழ்ச்சி


There will be no shortage of laughter - Actor Vishal Lainichi on the release of Madagajaraja
x

இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையையொட்டி பல படங்கள் வெளியாக உள்ளன.

சென்னை,

இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையையொட்டி பல படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, கேம் சேஞ்சர், வணங்கான், மெட்ராஸ்காரன், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, படை தலைவன், தருணம், டென் ஹவர்ஸ் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

இந்த பொங்கல் ரேஸில் விஷால் நடித்துள்ள 'மதகஜராஜா' திரைப்படமும் நேற்று இணைந்தது. அதன்படி, இப்படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் 2013 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 'மதகஜராஜா' ரிலீஸ் குறித்து நடிகர் விஷால் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்லார். அதில்,

"12 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது திரைப்பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த குடும்ப எண்டர்டெயின்மென்ட் படமான 'மதகஜராஜா' பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அதுவும் எனக்குப் பிடித்த சுந்தர் சி, சந்தானம் கூட்டணியில் உருவான படம். நிச்சயமாக சிரிப்புக்கு பஞ்சமிருக்காது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Next Story