ரவி மோகன் நடிக்கும் 34-வது படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
![The title teaser of Ravi Mohans 34th film has been released. The title teaser of Ravi Mohans 34th film has been released.](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36377458-ravimo.webp)
ரவி மோகனின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்பொழுது ஜீனி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ரவி மோகனின் 34-வது படத்திற்கு தற்காலிகமாக 'ஆர்.எம் 34' எனப்பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார்.
இந்நிலையில், 'ஆர்.எம் 34' படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'கராத்தே பாபு' எனப்பெயரிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story