'சிக்கந்தர்' திரைப்படத்தின் டீசர் வெளியானது


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சிக்கந்தர்' படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சிக்கந்தர்' படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நேற்று நடிகர் சல்மான் கானின் பிறந்தநாளை முன்னிட்டு சிக்கந்தர் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிப்பை வெளியிட்டனர். அதன்படி, தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


Next Story