பிரதீப் ரங்கநாதன், சீமான் நடிக்கும் எல்.ஐ.கே படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு


The team released a special poster of the film LIK starring Pradeep Ranganathan and Seeman
x

பிரதீப் ரங்கநாதன் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே).

சென்னை,

'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே). இந்த படத்தை தமிழ் சினிமாவில் 'போடா போடி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இவர் கடைசியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க எஸ்.ஜே சூர்யா மற்ரும் சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், பொங்கல் வாழ்த்து தெரிவித்து இப்படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தை கோடைக்காலத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Next Story