வைரலாகும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு தள கிளிக்ஸ்
அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' படத்தின் டீசர் கடந்த மாதம் 28-ந் தேதி வெளியானது. டீசரில் எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு... என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இப்படம் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
சமீபத்தில் நடிகர் அஜித்குமார் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.