'மாரி 2' நடிகரின் 25-வது படம்...பிறந்தநாளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்காலிகமாக கே.கே 25 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
சென்னை,
கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'அலிபாபா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா. அதனைத்தொடர்ந்து, 'கற்றது களவு', 'யாமிருக்க பயமேன்', 'வல்லினம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
பின்னர் 'கழுகு' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் 'மாரி 2', 'ஜோஸ்வா இமை போல் காக்க' ஆகிய படங்களில் நடித்திருந்தார். கடைசியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான 'பாராசூட்' வெப் தொடரில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இன்று நடிகர் கிருஷ்ணாவின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 25ஆவது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்காலிகமாக கே.கே 25 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
மனு மந்திரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.