97-வது ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்கும் ஹாலிவுட் நகைச்சுவை நடிகர்

97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி நடக்க உள்ளது.
மும்பை,
சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த விழா நடைபெறுகிறது. அதன்படி 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி (இந்திய தேதிபடி மார்ச் 3) நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விழாவை தொகுத்து வழங்குபவராக பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை வீடியோ வெளியிட்டு அகாடமி தெரிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்கள் வரும் மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story