சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' படத்தின் 2-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு


Thandel 2nd song ShivaShakti on 22nd December in Telugu, Hindi & Tamil
x

அமரன் படத்தைத்தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'.

சென்னை,

அமரன் படத்தைத்தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இதில், நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.

கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளநிலையில், சமீபத்தில் முதல் பாடலான 'புஜ்ஜி தல்லி' வெளியானது. இந்நிலையில், 2-வது பாடலான சிவசக்தி வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 22-ம் தேதி இப்பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை வாரணாசியில் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story