பிரபல தெலுங்கு படத்தின் 2-ம் பாகத்தில் நடனமாடிய 'பிகில்' பட நடிகை


Swathi Reddy from MAD Square
x

கடந்த ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் மேட்.

சென்னை,

கடந்த ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'மேட்'. இது இவர் இயக்கிய முதல் படமாகும். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இப்படத்தில் நர்னே நிதின், சங்கீத் ஷோபன், ராம் நிதின், ஸ்ரீ கவுரி பிரியா, அனனாதிகா சனில்குமார், கோபிகா உதயன், விஷ்ணு ஓய் மற்றும் கார்த்திகேய சாமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானநிலையில், தற்போது இதன் 2-வது பாடலான சுவாதி ரெட்டி என்ற பாடல் வெளியாகி உள்ளது. இதில், விஜய்யின் பிகில் படத்தில் நடித்திருந்த ரேபா மோனிகா நடனமாடியுள்ளார்.


Next Story