'ஓடாத படத்திற்குதான் சக்சஸ் மீட்டிங்...' - சசிகுமாரின் பேச்சு வைரல்


Success meeting only for non-running films... - Sasikumars speech goes viral
x
தினத்தந்தி 15 Jun 2024 7:54 AM IST (Updated: 15 Jun 2024 7:55 AM IST)
t-max-icont-min-icon

தோல்வியை ஒத்துக்கொண்டால்தான் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியும் என்று நடிகர் சசிகுமார் கூறினார்.

சென்னை,

நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கருடன். இப்படத்துக்கான கதையை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் எழுத, துரை செந்தில்குமார் இயக்கினார். இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் சக்சஸ் மீட்டிங் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் சசிகுமார்,

டைரக்டர் சக்சஸ் மீட்டிங் என்று சொன்னார். சக்சஸ் மீட்டிங் என்று சொல்லாதீர்கள், நன்றி மீட்டிங் என்று சொல்லுங்கள். ஏனென்றால், சக்சஸ் மீட்டிங் வைத்தால் படம் சரியாக ஓடாது என்று சொல்கிறார்கள். ஓடாத படத்திற்குதான் சக்சஸ் மீட்டிங் வைப்பார்கள் என்கிறார்கள். அது ஏனென்றால், ஒரு பயம். தோல்வி என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிடும்.

தோல்வியை ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறார்கள். ஒத்துக்க வேண்டும். அதை ஒத்துக்கொண்டால்தான் அடுத்த படத்தில் வெற்றி பெற முடியும். தோல்வியை ஒத்துக்கொண்டால்தான் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியும். இப்ப நன்றி என்று மாற்றிவிட்டார்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளது. சூரிக்காக இந்த படத்தில் நடிக்க வந்தேன். ஒரு நல்லது பண்ண வந்தேன். அது இப்ப எனக்கு நல்லதாகி விட்டது. இனி யாரும் அவரை புரோட்ட சூரி என்று சொல்லமாட்டார்கள். அதையெல்லம் அழித்துவிட்டார். கதையின் நாயகனாகதான் இருப்பார். கதையின் நாயகனாக இருக்கும் வரை அவர் ஜெயித்துகொண்டே இருப்பார். இவ்வாறு கூறினார்.

இவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story