'ஸ்ரீ வள்ளி என் இரண்டாவது அடையாளம்' - படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்து ராஷ்மிகா பதிவு


Srivalli is my second identity - Rashmika
x
தினத்தந்தி 9 Dec 2024 7:36 AM IST (Updated: 9 Dec 2024 9:10 PM IST)
t-max-icont-min-icon

புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்தில் எடுத்து புகைப்படங்களை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார்.

சென்னை,

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படத்தின் மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள படம் புஷ்பா 2: தி ரூல்.

அதன்படி, பிரமாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் கடந்த 5-ந் தேதி வெளியாகி இதுவரை ரூ.621 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தில், அல்லு அர்ஜுன் புஷ்பா கதாபாத்திரத்திலும், அவரது மனைவி ஸ்ரீ வள்ளியாக ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருந்தனர்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீ வள்ளி தனது இரண்டாவது அடையாளமாகிவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

'ஸ்ரீ வள்ளி என் இரண்டாவது அடையாளமாகிவிட்டார், இது எனக்கு ஆச்சரியமாகவும் பெருமையாகவும் உள்ளது. ஸ்ரீ வள்ளியை எனக்கு கொடுத்து, இந்த நிலைக்கு என்னை கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சுகுமார். அதற்காக அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

புஷ்பா இல்லாமல் ஸ்ரீ வள்ளி இல்லை. அதற்காக அல்லு அர்ஜுனுக்கு என் இதயத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஸ்ரீ வள்ளி வெறும் கதாபாத்திரம் அல்ல. அவரை உண்மையாக உணர்கிறேன்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Next Story