சூரியின் 'மாமன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


சூரியின் மாமன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
x
தினத்தந்தி 17 Jan 2025 12:11 PM (Updated: 17 Jan 2025 12:38 PM)
t-max-icont-min-icon

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள 'மாமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை 'கருடன்' திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இது குடும்ப உறவுகள் அது தொடர்பான உணர்வுகளை மையமாகக் கொண்ட படம் என்று சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு 'மாமன்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story