உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்!
சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ்.
சென்னை,
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை (7.5 - 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். பரிசு கோப்பை, பதக்கத்துடன் ரூ.11½ கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. சாம்பியன் குகேஷுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அங்கு அவருடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்தார் சிவகார்த்திகேயன். பின்னர் குகேஷுக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசளித்தார். இந்த சந்திப்பில் குகேஷின் பெற்றோரும் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story