அஜித் மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்
அஜித் மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
'அமராவதி' படத்தின் மூலம் கதாநாயகனான அறிமுகமான அஜித், 'ஆசை', 'காதல் கோட்டை' படங்கள் மூலம் பிரபலமானார். இவரது பல படங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுக்குமே டப்பிங் பணிகளையும் நிறைவு செய்துள்ளார். இருப்பினும் அஜித்தின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் அஜித்தை மீண்டும் திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்றும் 2025 ஏப்ரல் மாதத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் நடிகர் அஜித், கார் ரேஸிங்கில் கலந்துகொள்ள தயாராகி வரும் அஜித் கணிசமாக தனது உடல் எடையையும் குறைத்துள்ளார். மேலும் சமீப காலமாகவே அஜித் குமாரின் புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளன. அதாவது நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்காவின் 17 வது பிறந்த நாளை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.