நடுங்கிய கைகள்.. விஷாலின் உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்


நடுங்கிய கைகள்.. விஷாலின் உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்
x

'மதகஜராஜா' படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியின் போது கைகள் நடுங்கி கொண்டே மேடையில் பேசிய விஷாலின் உடல்நிலையை கண்டு ரசிகர் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை,

கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படம் 'மதகஜராஜா'. ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் அதே ஆண்டு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் 'மதகஜராஜா' திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின் வருகிற12-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் விஷால், சுந்தர் சி, குஷ்பு மற்றும் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் விஷால் பேசிய போது மைக்கை பிடிக்க முடியாமல் கைகள் நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் பேசினார்.

கை நடுங்கி கொண்டே மேடையில் பேசிய விஷாலின் உடல்நிலையை கண்டு ரசிகர் அதிர்ச்சி அடைந்தனர். ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவரது மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, "நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் சிகிச்சை மற்றும் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்".


Next Story