முதல் இடத்தில் ஷாருக்கான், 2-வது இடத்தில் விஜய் - தேசிய அளவில் கவனம் பெற்ற பட்டியல்


Shah Rukh Khan at No. 1, Vijay at No. 2 - a nationally focused list
x
தினத்தந்தி 6 Sep 2024 3:20 AM GMT (Updated: 6 Sep 2024 3:25 AM GMT)

நடிகர் விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான படம் 'தி கோட்'.

சென்னை,

இந்தியாவின் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் கடந்த ஆண்டு செலுத்திய வருமானவரி விவரங்களை அமெரிக்க இதழான பார்ச்சூன் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சினிமா நட்சத்திரங்களை தற்போது காணலாம். அதன்படி, 2023-24ம் நிதியாண்டில் அதிக வருமானவரி செலுத்திய சினிமா பிரபலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் ஷாருக்கான் உள்ளார். இவர் ரூ.92 கோடி வரி செலுத்தி இருக்கிறார்.

இவருக்கு அடுத்த படியாக 2-வது இடத்தில் உள்ளவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் ரூ.80 கோடி வரி செலுத்தி இருக்கிறார். சல்மான் கான் ரூ.75 கோடியும், அமிதாப் பச்சன் ரூ. 71 கோடியும் செலுத்தி இருக்கின்றனர். அதனைத்தொடர்ந்து, அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர் , ஹிருத்திக் ரோசன் ஆகியோர் உள்ளனர். இந்த பட்டியல் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஷாருக்கான் கடந்த வருடம் தொடர்ச்சியான மூன்று வெற்றிப்படங்களை கொடுத்தார்( பதான், ஜவான் மற்றும் டுங்கி). இவர் அடுத்தபடியாக சுஜாய் கோஷ் இயக்கும் 'கிங்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், ஷாருக்கான் மகள் சுகானா கானும் நடிப்பதாக கூறப்படுகிறது.

மறுபுறம், நடிகர் விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் படம் 'தி கோட்'. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.


Next Story