சயிப் அலிகான் மீதான தாக்குதல் சம்பவம் - மனைவி கரீனா கபூர் வேதனை


Saif Ali Khans attack incident - wife Kareena Kapoor is in pain
x
தினத்தந்தி 17 Jan 2025 6:18 AM (Updated: 17 Jan 2025 7:29 AM)
t-max-icont-min-icon

சயிப் அலிகானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் வேதனை தெரிவித்துள்ளார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பாந்த்ராவில் உள்ள சயிப் அலிகான் வீட்டிற்குள் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் நுழைந்தார். அங்கிருந்த பணிப்பெண்ணுடன் அந்த மர்மநபர் வாக்குவாதம் செய்துள்ளார்.

சத்தம் கேட்டு அங்குவந்த சயிப் அலிகானை, அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த சயிப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சயிப் அலிகானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் வேதனை தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், 'இந்த நாள் நம்ப முடியாத அளவுக்கு சவாலாக எங்கள் குடும்பத்திற்கு இருந்திருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். தற்போது அந்த மர்மநபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story