அதிக பிலிம்பேர் விருது வென்ற நடிகை நயன்தாராவோ, திரிஷாவோ இல்லை - யார் தெரியுமா?


நடிகை நயன்தாரா 5 முறை பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.
x
தினத்தந்தி 17 July 2024 7:53 AM IST (Updated: 17 July 2024 8:36 AM IST)
t-max-icont-min-icon

நடிகை நயன்தாரா 5 முறை பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவரது நடிப்பு மற்றும் நடனத்திற்காக தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், சாய் பல்லவி வரலாற்று சாதனை ஒன்றை படத்துள்ளார். அதன்படி, அதிகமுறை பிலிம்பேர் விருது வென்ற தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான "பிரேமம்" மூலம் அறிமுகமானார். அப்படத்தில் ஆசிரியராக இவரது நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதேபோல், இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனால் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை "பிரேமம்" மூலம் வென்றார்.

அதனைத்தொடர்ந்து, இவர் நடித்த பிடா, லவ் ஸ்டோரி, ஷியாம் சிங்கா ராய் (விமர்சகர்கள்), விரத பர்வம் (விமர்சகர்கள்) மற்றும் கார்கி ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

மேலும், கலி, மாரி 2, ஷியாம் சிங்கா ராய், விரத பர்வம் ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். இவ்வாறு 10 முறை பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு 6 முறை விருதை வென்றுள்ளார்.

இதன்மூலம் சாய்பல்லவி, நயன்தாராவை முந்தியுள்ளார். நயந்தாரா இதுவரை 14 முறை பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டநிலையில், 5 முறை பிலிம்பேர் விருது வென்றுள்ளார். மேலும், நடிகை திரிஷாவும் 5 முறை பிலிம்பேர் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாய் பல்லவி தற்போது நாக சைதன்யாவின் தண்டேல் படத்திலும் ரன்பீர் கபூரின் ராமாயணத்திலும் நடித்து வருகிறார்.


Next Story