சிம்புவின் 2 படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?


Sai Abhayankar to compose music for 2 Simbus films?
x

சமீபத்தில் சாய் அபயங்கரின் 3-வது இண்டிபெண்டண்ட் பாடலான 'சித்திரபுத்திரி' என்ற பாடல் வெளியானது.

சென்னை,

பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு, வாரிணி தம்பதியின் மகன் சாய் அபயங்கர். இவர் 'கட்சி சேர' என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். அதனை தொடர்ந்து 'ஆச கூட'என்ற பாடலையும் வெளியிட்டார். இந்தப் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இதனால் அவருக்கு லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்திற்கும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்திற்கும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் சாய் அபயங்கரின் 3-வது இண்டிபெண்டண்ட் பாடலான 'சித்திரபுத்திரி' என்ற பாடல் வெளியானது.

இந்த நிலையில், சிம்புவின் 49-வது மற்றும் 51-வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story