நடிகர் சிவகார்த்திகேயனை கிண்டல் செய்ததற்கு மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே பாலாஜி!


நடிகர் சிவகார்த்திகேயனை கிண்டல் செய்ததற்கு மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே பாலாஜி!
x

ஆர்.ஜே பாலாஜி நடித்திருக்கும் சொர்க்கவாசல் திரைப்படம் வருகின்ற நவம்பர் 29ம் தேதி திரைக்கு வர உள்ளது.

சென்னை,

நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், புகழ், ஜில் ஜங் ஜக், தேவி, சலூன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது படங்களில் நடிப்பதோடு கிரிக்கெட் போட்டிகளில் தனக்கே உரித்தான பாணியில் வர்ணனையாளராக இருந்து ரசிகர்களை வியப்பூட்டி வருகிறார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரே இயக்கி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்குகிறார்.

சொர்கவாசல் எனும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள்.

மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பை படக் குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தனர்.

ஆர்.ஜே. பாலாஜி நடித்திருக்கும் சொர்க்கவாசல் திரைப்படமானது வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. எனவே இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஆர்.ஜி. பாலாஜி சொர்க்கவாசல் படம் குறித்தும் தான் கடந்து வந்த பாதை குறித்தும் பேசியுள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தொலைக்காட்சியில் விருது வழங்கும் நிகழ்ச்சிகளை கலாய்க்கும் ஷோ ஒன்றை தான் செய்ததாகவும் அதில் வேறொரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் எமோஷனலானதை கலாய்த்ததாகவும் கூறினார். மேலும் தான் அந்த ஷோவை செய்யும்போது தனக்காது தவறாக தெரியவில்லை என அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்னர்தான் தன் தவறை உணர்ந்ததாக தெரிவித்த ஆர்.ஜே. பாலாஜி அதன் பிறகு சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story