பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்'படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


Release date announced for Pradeep Ranganathans Dragon
x

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்திலும் நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.


Next Story