ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் படம் - படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்


Rashmika Mandannas first horror film - Important information
x

ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ள முதல் ஹாரர் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

சென்னை,

இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஹாரர் படங்கள் அதிக அளவில் வசூல் செய்துள்ளன. அதன்படி, 'ஷைத்தான்', 'முஞ்யா', 'ஸ்ட்ரீ 2' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த சூழலில், இதுவரை ஹாரர் படத்தில் நடிக்காத நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தற்போது அதன் பக்கம் திரும்பி இருக்கிறார். அதன்படி, ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ள முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, ஸ்ட்ரீ 2, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு 'தாமா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'முஞ்யா' இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் இயக்கவுள்ள இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் ஆயுஷ்மான் குரானா இணைந்து இருக்கும் வீடியோ வெளியிட்டு 'தாமா' படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.


Next Story