ஒரே நாளில் வெளியாகும் ராஷ்மிகா, ஸ்ரீலீலாவின் பாலிவுட் படங்கள்

ஸ்ரீலீலா பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக அறிமுகமாக இருக்கிறார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மந்தனா மற்றும் ஸ்ரீலீலா. ராஷ்மிகா மந்தனா கடந்த ஆண்டு ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'அனிமல்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது சல்மான் கானுடம் 'சிக்கந்தர்' படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், பாலிவுட்டில் 'தாமா' என்கிற ஹாரர் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்ட்ரீ, ஸ்ட்ரீ 2, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாகிறது.
மறுபுறம், ஸ்ரீலீலா பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக அறிமுகமாக இருக்கிறார். அனுராக் பாசு இயக்கும் இப்படமும் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இவ்வாறு இரண்டு முன்னணி தென்னிந்திய நடிகைகளின் பாலிவுட் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் அந்த படங்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.