ஆர்.சி.16 படத்தில் பாடல் பாடும் ராம் சரண்?


Ram Charan to sing a folk song
x

கிராமத்து பின்னணியில் படமாக்கப்படும் இந்த படத்தில் ஒரு நாட்டுப்புற பாடல் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கிராமத்து பின்னணியில் படமாக்கப்படும் இந்த படத்தில் ஒரு நாட்டுப்புற பாடல் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அந்த பாடலை ராம் சரணை பாட வைக்க புச்சி பாபு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு ராம் சரண் பாடினால் அது படத்திற்கு மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும்.



Next Story