புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் - தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் கைது


Pushpa 2 stampede incident: - theater owner, manager including 3 people arrested
x

'புஷ்பா 2' திரைப்பட சிறப்பு காட்சியை காண ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.

ஐதராபாத்,

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவான 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த 5-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது.

இப்படத்துக்கு தெலுங்கானா அரசு அனுமதி பெற்று திரையிடப்பட்ட அதிகாலை சிறப்பு காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் தியேட்டர்களில் திரண்டனர். அப்போது சிறப்பு காட்சியை காண ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.

இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்திருந்தார். மேலும், இனிமேல் எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று தெலுங்கானா அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story