ஒத்திவைக்கப்பட்ட புஷ்பா 2 தயாரிப்பு நிறுவனத்தின் 'ராபின்ஹுட்' திரைப்படம்


Pushpa 2 Production Companys Robin Hood Movie Postponed
x

புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் என்ற சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருந்த ஸ்ரீலீலா தற்போது, ராபின்ஹுட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சென்னை,

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் கிஸ்ஸிக் என்ற சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருந்த ஸ்ரீலீலா தற்போது, ராபின்ஹுட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார்.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராபின்ஹுட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக, ராபின்ஹுட் திட்டமிட்டபடி வரும் 25 அன்று வெளியிடப்படாது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்த சிறிது காத்திருங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேம் சேஞ்சர், டாக்கு மகாராஜ் போன்ற படங்கள் சங்கராந்தி விடுமுறையை (பொங்கல்) குறி வைத்துள்ளதால் ராபின்ஹுட் தயாரிப்பாளர்கள் எந்த வெளியீட்டு தேதியை தேர்ந்தெடுப்பார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.


Next Story