முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பயணத்தை திரையில் வழங்குவதில் பெருமிதம் - சிவகார்திகேயன் நெகிழ்ச்சி
'அமரன்' படம் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
சென்னை,
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், 'அமரன்' படம் தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
பெருங்காதலும், ஒப்பில்லா வீரமும், தியாகமும் நிறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை பயணத்தை திரையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.என தெரிவித்துள்ளார் .
பெருங்காதலும், ஒப்பில்லா வீரமும், தியாகமும் நிறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை பயணத்தை திரையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 30, 2024
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
It's been an emotional experience to portray the journey of #MajorMukundVaradarajan, his… pic.twitter.com/lMrkpXF8k4