பிரேம்ஜி நடிக்கும் "வல்லமை" படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு


பிரேம்ஜி நடிக்கும்  வல்லமை படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு
x
தினத்தந்தி 31 Jan 2025 4:20 PM (Updated: 31 Jan 2025 4:22 PM)
t-max-icont-min-icon

கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம்ஜி நடிக்கும் 'வல்லமை' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக பிரேம்ஜி கதாநாயகனாக வல்லமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை கருப்பையா முருகன் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார்.

வல்லமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

டிவிஎஸ்50 -ல் ஒரு பள்ளிக்கூட சிறுமியுடன் வண்டியை பிரேம்ஜி ஓட்டுவது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி மேற்கொண்டுள்ளார். ஜிகேவி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் குமார் படதொகுப்பை செய்துள்ளார். படத்தை பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Next Story