பிரபல பாடகிக்கு அரிய வகை செவித்திறன் குறைபாடு; ரசிகர்கள் அதிர்ச்சி


பிரபல பாடகிக்கு அரிய வகை செவித்திறன் குறைபாடு; ரசிகர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 18 Jun 2024 6:30 PM IST (Updated: 19 Jun 2024 11:50 AM IST)
t-max-icont-min-icon

பிரபல பாடகிக்கு அரிய வகை செவித்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு திடீரென காது கேட்காமல் போய்விட்டது.

மும்பை,

இந்தி திரைத்துறையில் பிரபல பாடகியாக இருப்பவர் அல்கா யாக்னிக். 58 வயதான அல்கா யாக்னிக் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். 25 மொழிகளில் 9 ஆயிரத்திற்கும் அதிமான பாடல்களை பாடியுள்ளார். 1988ம் ஆண்டு இந்தியில் வெளியான டிசாப் திரைப்படத்தில் வெளியான 'ஏக் தோ தீன் சார்' பாடலை பாடி அல்கா யாக்னிக் மிகவும் பிரபலமானார். 30 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் இவர் பல்வேறு திரைப்படங்களில் பின்னணி பாடகியாகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், பாடகி அல்கா யாக்னிக்ற்கு திடீரென செவித்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அரிய வகை செவித்திறன் குறைபாடு காரணமாக அவருக்கு திடீரென காது கேட்காமல் பொய்விட்டது. அரிதான வைரல் தொற்று காரணமாக அல்கா யாக்னிக் செவித்திறனை இழந்துள்ளார். இந்த பாதிப்பு தொடர்பாக டாக்டரிடம் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது குறித்த அறிவிப்பை பாடகி அல்கா யாக்னிக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிரம் பதிவில்,

எனது ரசிகர்கள், நலன் விரும்பிகளுக்கு நான் ஒரு தகவலை கூறப்போகிறேன். சில வாரங்களுக்கு முன்பு நான் விமானத்தில் இருந்து வெளியே வந்தபோது திடீரென என்னால் எதையும் கேட்கமுடியவில்லை என்பதை உணர்ந்தேன்.

சில வாரங்கள் கழித்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான் ஏன் பொதுவெளியில் தோன்றுவதில்லை என்று கேட்கும் எனது நண்பர்கள், ரசிகர்கள், நலன் விரும்பிகளுக்கு எனது அமைதியை உடைத்து ஒரு உண்மையை கூறப்போகிறேன். எனக்கு அரிதான செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காதின் உள்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காதில் கேட்கும் ஒலியை மூளைக்கு கொண்டு செல்லும் நரம்பு செல்கள் அதன் திறனை இழந்துள்ளன. வைரஸ் பாதிப்பு காரணமாக கேட்கும் திறனை இழந்துள்ளேன். இந்த திடீர் பெரும் பின்னடைவை என்னை முற்றிலும் அறியாமல் பிடித்துவிட்டது. இந்த பின்னடைவில் இருந்து மீண்டுவர நான் முயற்சித்து வருகிறேன். இதில் உங்கள் பிரார்த்தனை எனக்கு தேவை. எனது ரசிகர்களுக்கும், திரைத்துறையின் பணியாற்றும் இளம் தலைமுறையினர், அதிக சத்தத்துடன் பாட்டு கேட்கும்போதும், ஹெட்போன் பயன்படுத்தும்போதும் கவனமாக இருக்க வேண்டும். எனது உடல்நலம் குறித்து எப்போதாவது ஒருநாள் மீண்டும் கூற விரும்புகிறேன். உங்கள் அன்பாலும், நம்பிக்கையாலும் நான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவேன் என்று நம்புகிறேன்'

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story