வைரலாகும் 'ரெட்ரோ' படத்தின் பொங்கல் வாழ்த்து போஸ்டர்


Pongal greeting poster of the film Retro goes viral
x

பொங்கல் பண்டிகைக்கு ’ரெட்ரோ’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். 'ரெட்ரோ' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.

இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்நிலையில், ரெட்ரோ படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story