'அதைச் சொல்லும் தைரியம் அவருக்கு மட்டுமே உண்டு' - பகத் பாசிலை பாராட்டிய ஊர்வசி


Only he has the courage to say that! Urvashi praise on Fahadh
x

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஊர்வசி நடித்து இருக்கிறார்.

சென்னை,

தமிழில் பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் ஊர்வசி. தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். தற்போது ஊர்வசி சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், நடிகை ஊர்வசி 'உள்ளொழுக்கு' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஊர்வசி, பகத்பாசிலை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'இன்று இருக்கும் நடிகர்கள், நட்சத்திர அந்தஸ்தை பெறவும், ஏராளமான ரசிகர்களை ஈர்க்கவுமே முயற்சிக்கிறார்கள். ஆனால், பகத்பாசில் மட்டும்தான் வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏனென்றால், அவர் தன்னை நடிகர் என்று மட்டுமே வரையறுக்க விரும்புகிறார். அதன்படி, அவர் மட்டுமே நடிகர் என்ற பாதையில் மாறாமலும் விலகாமலும் இருக்கிறார். இதனால், நடிகர் என்று சொல்லும் தைரியம் அவருக்கு மட்டுமே உள்ளது' என்றார்.


Next Story