புறநானூறு இல்லை...எஸ்.கே 25 படத்தின் தலைப்பு இதுவா?
சூர்யா நடிக்க இருந்தபோது இப்படத்திற்கு புறநானூறு என தலைப்பு வைத்திருந்தார் சுதா கொங்கரா
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், 'அமரன்' படத்தை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார்.
இதற்கிடையில் இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யா நடிக்க இருந்தபோது இப்படத்திற்கு புறநானூறு என தலைப்பு வைத்திருந்தநிலையில், தற்போது இப்படத்திற்கு தற்காலிகமாக எஸ்.கே.25 எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்க, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தை சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், இப்படத்திற்கு 1965 என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தின் கதை 1965 ஆம் ஆண்டு நடைபெறும் ஒரு சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டதன் காரணமாக இந்த தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.