'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' - பிரதீப் ரங்கநாதன் இல்லை...விக்னேஷ் சிவனின் முதல் தேர்வு யார் தெரியுமா?


Not Pradeep Ranganathan...Do you know who is Vignesh Shivans first choice to star in the film Love Insurance Kompany?
x

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை முதலில் தேர்ந்தெடுக்கவில்லை என்று விக்னேஷ் சிவன் கூறினார்.

சென்னை,

'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே). இந்த படத்தை தமிழ் சினிமாவில் 'போடா போடி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இவர் கடைசியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் சிங்கிளான 'தீமா' பாடலும் வெளியாகி வைரலாகின

இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விக்னேஷ் சிவன், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் கதாநாயகனாக நடிக்க பிரதீப் ரங்கநாதன் தனது முதல் தேர்வாக இல்லை என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் கதாநாயகனாக நடிக்க பிரதீப் ரங்கநாதனை நான் முதலில் தேர்ந்தெடுக்கவில்லை. சிவகார்த்திகேயன்தான் எனது முதல் தேர்வாக இருந்தார். ஆனால், அது நடக்கவில்லை' என்றார்.


Next Story