புதிய போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படக்குழு!


புதிய போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படக்குழு!
x
தினத்தந்தி 30 Aug 2024 10:36 AM GMT (Updated: 30 Aug 2024 10:51 AM GMT)

தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது.

சென்னை,

ராயன் படம் கடந்த மாதம் 26ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்ட நிலையில் ஓ.டி.டி.யிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதே சமயம் தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'.

இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் முதல் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்,து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் தனுஷ் தனது நான்காவது படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் நித்யா மேனன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story