புதிய வெர்ஷனில் 'சச்சின்' பட பாடல்


New version of Sachin movie song released
x

'சச்சின்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

சென்னை,

கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் 'சச்சின்'. இந்த படத்தினை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

'சச்சின்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அதன்படி கோடை விடுமுறையில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சச்சின் படம் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'கண்மூடி திறக்கும்போது' பாடலின் லிரிக்கல் வீடியோ புதிய வெர்ஷனில் வெளியாகியுள்ளது.


Next Story