சித்தார்த் நடித்த 'மிஸ் யூ' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு


சித்தார்த் நடித்த மிஸ் யூ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

சித்தார்த் நடித்த ‘மிஸ் யூ’ படம் வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி மக்கள் மனதை கவர்ந்தார். நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் தயாரித்து நடித்த 'சித்தா' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'இந்தியன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது, என் ராஜசேகர் இயக்கத்தில் 'மிஸ் யூ' என்ற படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. உலகமெங்கும் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி வைரலாகின.

இத்திரைப்படம் கடந்த நவம்பர் 29 ம் தேதிதிரையரங்குகளில் வெளியிடுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் அரசு விடுத்துள்ள புயல் எச்சரிக்கை காரணமாக 'மிஸ் யூ' திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

மேலும் 'மிஸ் யூ' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வரும் 13ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


Next Story