இயக்குனர் கவுதம் மேனன் - ரவி மோகன் கூட்டணியில் புதிய படம்!


இயக்குனர் கவுதம் மேனன் - ரவி மோகன் கூட்டணியில் புதிய படம்!
x
தினத்தந்தி 19 Jan 2025 12:05 PM (Updated: 19 Jan 2025 12:17 PM)
t-max-icont-min-icon

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது

சென்னை,

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு என பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் தற்போது 'டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்' எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற 23ம் தேதி திரைக்கு வருகிறது.

நடிகர் ரவி மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கவனம் ஈர்த்துள்ளது. இதுவரை, இப்படம் ரூ. 8 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, ரவி மோகன் நடித்த ஜீனி படம் இந்தாண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தமிழில் உருவாக இருக்கிறது. இந்தப் படம் தொடர்பான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், "அடுத்ததாக இயக்குநர் வெற்றி மாறனின் கதையைத் திரைப்படமாக்குகிறேன். நடிக்க நடிகர் ரவி மோகன் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் அதன் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். அண்மையில், வெற்றி மாறன் கதையில் தான் நடிக்கவுள்ளதை ரவி மோகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story