நானிதான் இன்றைய தலைமுறையின் 'சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா' - 'கோர்ட்' பட நடிகர் பாராட்டு

நானி தயாரிப்பில் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் படம் ’கோர்ட் - ஸ்டேட் வெர்சஸ் நோபடி’.
சென்னை,
நடிகர் நானியின் 'வால்போஸ்டர் சினிமா' தயாரிப்பில் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் படம் 'கோர்ட் - ஸ்டேட் வெர்சஸ் நோபடி'.
ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி, சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.15.90 கோடி வசூலை குவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இப்படவிழாவில் நடிகர் சிவாஜி பேசுகையில், 'என்னுடைய சிறுவயதில், சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவை 'டேரிங் அண்ட் டேஷிங்' என்றுதான் அழைப்பார்கள். இன்றைய தலைமுறையின் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா என்று நானியைத்தான் சொல்வேன்.
நானி ஒரு பெரிய நட்சத்திரமாக இருப்பதால், 'கோர்ட்' போன்ற சிறிய படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், திறமைவாய்ந்த நடிகர், நடிகைகளை ஊக்குவிப்பதற்காகவும், நல்ல கதைகளை வெளியில் கொண்டு வருவதற்காகவும் 'வால்போஸ்டர் சினிமா'வைத் தொடங்கி இருக்கிறார்' என்றார்.