'மழையில் நனைகிறேன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் அன்சன் பால் நடித்த ‘மழையில் நனைகிறேன்’ படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சென்னை,
பிரபல மலையாள நடிகர் அன்சன் பால். இவர் தமிழில் ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மழையில் நனைகிறேன்'. இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்து இருக்கிறார்கள். டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தில் ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜூலையில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மழை ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனாலேயே இப்படத்திற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளான வருகிற 12-ம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருந்தது. ஆனால் படம் சில காரணங்களால் வெளியாக வில்லை. தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
'நாட்கள் அழகாய் மாறி போகுதே' என்ற வீடியோ பாடல் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.