'லவ்யப்பா' படம் பார்த்து உணர்ச்சிவசபட்ட அமீர்கான்

'லவ்யப்பா' திரைப்படம் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியாக உள்ளது.
மும்பை,
இந்தி திரைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகர் அமீர் கான். இவரது மகன் ஜுனைத் கான். இவர் தற்போது இந்தி திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
இதற்கு முன் மகாராஜ் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த ஜுனைத் கான் தற்போது காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள 'லவ்யப்பா' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
இத்திரைப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீதேவி மகள் குஷி கபூர் நடித்துள்ளார். 'லவ்யப்பா' திரைப்படம் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில், இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடந்தது. அப்போது படத்தை பார்த்த நடிகர் அமீர்கான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். மேலும், அவரது மகன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட அவர் இயக்குனர் அத்வைத் சந்தனை பாராட்டினார்.
Related Tags :
Next Story