'சினிமாவில் மொழி ஒரு தடையே இல்லை' - நடிகை விஜேதா வசிஸ்ட்
தமிழ் சினிமாவில் அறிமுகமாவது பற்றி விஜேதா வாசிஸ்ட் பேசியுள்ளார்.
சென்னை,
பிரபல கன்னட இயக்குனர் ஏ.எம்.ஆர் ரமேஷ். இவரது மகள் விஜேதா வசிஸ்ட். கன்னட சினிமா குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், விஜேதா வாசிஸ்ட் 'ரீலோடு' என்ற தமிழ் படத்தின் மூலம்தான் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் அறிமுகமாவது பற்றி விஜேதா வாசிஸ்ட் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "
'எனது முதல் கதாபாத்திரம் கன்னட படத்தில் இருக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால் அப்படி நடக்கவில்லை. நான் அங்கு பல ஆடிஷனில் கலந்துகொண்டு பல நிராகரிப்பை சந்தித்தேன். ஆனால், தமிழ் திரையுலகம் அனைவரையும் வரவேற்கிறது. தமிழ் இண்டஸ்ட்ரியில் எல்லோருமே மரியாதையாகவும், வரவேற்புடனும் இருக்கிறார்கள். சினிமா உலகில் மொழி ஒரு தடையே இல்லை' என்றார்.
Related Tags :
Next Story