நாக சைதன்யாவுக்கு வில்லனாகும் 'லாபதா லேடீஸ்' பட நடிகர்?

நாக சைதன்யாவின் 24-வது படத்தை கார்த்திக் தண்டு இயக்க உள்ளார்
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா. இவர் கடந்த 2009ம் ஆண்டு வெளியான 'ஜோஷ்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து மனம், ஆட்டோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'கஸ்டடி'. இதனையடுத்து நாக சைதன்யா, 'தண்டேல்' படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் இவரது பிறந்தநாளன்று 24-வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, தற்காலிகமாக என்.சி 24 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கார்த்திக் தண்டு இயக்க உள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் புஷ்பா பட இயக்குனரின் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிகின்றது. இந்நிலையில், இப்படத்தில், நாக சைதன்யாவுக்கு வில்லனாக நடிக்க 'லாபதா லேடீஸ்' படத்தில் நடித்திருந்த ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.