'கேம் சேஞ்சர்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத கியாரா அத்வானி - இதுதான் காரணமா?
நடிகை கியாரா அத்வானி ’கேம் சேஞ்சர்’ படத்தின் எந்த புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.
ஐதராபாத்,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.
அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது படத்தின் புரமோஷனுக்காக படக்குழு வெவ்வேறு நகரங்களுக்கு சென்று வருகிறது. ஆனால், நடிகை கியாரா அத்வானி இதன் எந்த புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இணையத்தில் பரவ ஆரம்பித்தன.
இந்நிலையில், அதனை நடிகை கியாரா அத்வானியின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கியாரா அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ச்சியான வேலையால் சோர்வு காரணமாக அவர் ஓய்வெடுத்து வருகிறார், என்றார்.