சித்தார்த்தின் 'மிஸ் யூ' பட டிரெய்லரை வெளியிடும் கார்த்தி

சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளது.
சென்னை,
நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். 'ஆயுத எழுத்து' என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் தயாரித்து நடித்த 'சித்தா' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் தற்போது, என் ராஜசேகர் இயக்கத்தில் 'மிஸ் யூ' என்ற படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
ஒரு இளைஞன் தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை, தீவிரமாகக் காதலிக்கிறான் ஏன் ? எப்படி? எதற்கு? தனக்குப் பிடிக்கவில்லை எனும்போதும், நாயகன் ஏன் காதலிக்கிறான் எனும் கேள்விக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம்தான் இந்தப்படத்தின் கதை. ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. உலகமெங்கும் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.
இத்திரைப்படம் வருகிற 29 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி வைரலாகின. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட உள்ளார்.