'கங்குவா' படத்துக்கு தடை கோரிய வழக்கு: பாக்கி தொகை நாளை வழங்கப்படும் - தயாரிப்பு நிறுவனம் உறுதி


கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கு: பாக்கி தொகை நாளை வழங்கப்படும் - தயாரிப்பு நிறுவனம் உறுதி
x
தினத்தந்தி 7 Nov 2024 4:59 PM IST (Updated: 7 Nov 2024 5:07 PM IST)
t-max-icont-min-icon

'கங்குவா' படத்தை வெளியிட தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

சென்னை,

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற 14-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து, படத்தின் புரமோசன் பணிகளில் 'கங்குவா' படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், 'கங்குவா' படத்தை தயாரித்துள்ள ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பல்வேறு திரைப்படங்களை தயாரிப்பதற்காக வாங்கிய ரூ. 99 கோடியே 22 லட்சம் கடனில் மீதமுள்ள ரூ. 55 கோடியை திரும்ப வழங்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, பாக்கி தொகையை கொடுக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என்று ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை நாளை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார்.


Next Story