'கல்கி 2898 ஏடி': படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுக்கு ஏற்பட்ட காயத்தை நினைவுகூர்ந்த நாக் அஸ்வின்


Kalki 2898 AD: Director Nag Ashwin recalls Amitabh Bachchans injury during the shoot
x
தினத்தந்தி 1 Jan 2025 6:47 AM IST (Updated: 1 Jan 2025 9:50 AM IST)
t-max-icont-min-icon

இயக்குனர் நாக் அஸ்வின் ,'கல்கி 2898 ஏடி'படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுக்கு ஏற்பட்ட காயத்தை நினைவுகூர்ந்தார்.

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கர்ணனாக நடித்த திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில், அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன், யாஸ்கினாக கமல்ஹாசன், கிருஷ்ணராக கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்தனர்.

இப்படம் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானநிலையில், உலகம் முழுவதும் ரூ,1,100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. தற்போது இதன் 2-ம் பாகப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இயக்குனர் நாக் அஸ்வின் ,'கல்கி 2898 ஏடி'படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுக்கு ஏற்பட்ட காயத்தை நினைவுகூர்ந்தார். இது குறித்து அவர் கூறுகையில்,

"படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. அப்போது என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை. இந்திய மக்கள் அனைவரும் எங்களை திட்ட போகிறார்கள் என்ற பயம் எனக்கு உண்டானது" என்றார்


Next Story