ஜமீன் வாரிசை கரம் பிடித்த நடிகர் காளிதாஸ் ஜெயராம்


ஜமீன் வாரிசை கரம் பிடித்த நடிகர் காளிதாஸ் ஜெயராம்
x
தினத்தந்தி 8 Dec 2024 2:33 PM IST (Updated: 8 Dec 2024 6:20 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமணம் கேரளா குருவாயூர் கோவிலில் நடந்தது.

பிரபல நடிகர் ஜெயராம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் முறை மாமன், தெனாலி, பஞ்சதந்திரம் ஆகிய படங்கள் மிகவும் பிரபலம். அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் மீண்குழம்பும் மண் பானையும், பூமரம், ஒருபக்க கதை ஆகிய படங்களில் தனது ஆரம்ப காலகட்டங்களில் நடித்தார். பின்னர் சுதா கொங்குரா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்த 'பாவக் கதைகள்' ஆந்தாலஜி தொடரில் அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. அந்த படத்தில் திருநங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் விக்ரம், இந்தியன் 2 ஆகிய படங்கள் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

காளிதாஸ் ஜெயராம் மற்றும் மாடல் அழகி தாரிணி காளிங்கராயர் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தாரிணி காளிங்கராயர் 2021ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது இடம்பிடித்தார்.

திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜெயராம் மற்றும் அவரது மனைவி, காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரிணி ஆகியோர் பங்கேற்றனர். தாரணி காளிங்கராயர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊத்துக்குளி ஜமீன் வாரிசு ஆவார்.

இந்த நிலையில் காளிதாஸ் ஜெயராமனுக்கு தாரணி காளிங்கராயருக்கும் இன்று கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது.

இன்னும் சில நாட்களில் காளிதாஸ் ஜெயராம் - தாரணி வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதில் அரசியல்வாதிகள் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story