'புஷ்பா 2' படத்துக்கு ஆதரவு குரல் கொடுத்த ஜான்வி கபூர்


புஷ்பா 2 படத்துக்கு ஆதரவு குரல் கொடுத்த ஜான்வி கபூர்
x

மேற்கத்திய படங்களை கொண்டாடுகிறோம், ஆனால் சொந்த நாட்டில் இருந்து வரும் படங்களை குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று நடிகை ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா'. இந்த படம் பான் இந்தியா அளவில் பலத்தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் 'புஷ்பா 2' கடந்த 5ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார். மேலும் மைம் கோபி, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, அஜய் கோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்த இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் 'டான்சிங் குயின்' நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. 'புஷ்பா 2' திரைப்படம் வெளியான முதல் 3 நாளில் உலகளவில் ரூ.621 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐமேக்ஸ் தியேட்டர்களில் தற்போது 'புஷ்பா 2' தான் திரையிடப்பட்டு இருக்கிறது. அதனால் ஹாலிவுட் படமான இன்டர்ஸ்டெல்லர் இந்தியாவில் மட்டும் ரிலீஸ் ஆக வில்லை. அதனால் அந்த படத்தின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இது பற்றி இன்ஸ்டாவில் வந்த பதிவுக்கு நடிகை ஜான்வி கபூர் கமெண்ட் செய்து இருக்கிறார். "புஷ்பா 2ம் சினிமா தான். மேற்கத்திய படங்களை கொண்டாடும் நீங்கள், சொந்த நாட்டில் இருந்து வரும் படங்களை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். மற்றநாடுகளை பாராட்டுவது மற்றும் பெரிதாகப் பார்ப்பது, அதுவே நம் சினிமாவால் ஈர்க்கப்பட்டால் நாமே வெட்கப்படுவது வருத்தமே" என ஜான்வி கூறி இருக்கிறார்.


Next Story