'ஜெயிலர்' நடிகை மிர்னா மேனனின் புதிய படம் அறிவிப்பு


Jailor actress Mirna Menons new film announcement
x

ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்து இருந்தவர் மிர்னா மேனன்

சென்னை,

ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்து இருந்தவர் மிர்னா மேனன். கேரளாவை சேர்ந்த மிர்னா மேனன் பட்டதாரி எனும் படத்தின் மூலம் 2016ல் சினிமாவில் அறிமுகமானார். 'பட்டதாரி' படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், மிர்னாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

மிர்னா `களவாணி மாப்பிள்ளை', `புர்கா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான `பர்த் மார்க்' படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இந்நிலையில், மிர்னா மேனனின் புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி"டான் போஸ்கோ" எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

இப்படத்தில் மிர்னா மேனன் கல்லூரி ஆசிரியை சுமதியாக நடிக்கிறார். இப்படத்தை ஷங்கர் கவுரி இயக்குகிறார். மேலும் கதாநாயகனாக ருஷ்யா நடிக்கிறார்.


Next Story