'அவருடன் பணியாற்றியது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது' - நடிகை ஊர்வசி ரவுத்தேலா
தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. இவர், 'சிங் சாப் தி கிரேட்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா. தெலுங்கு, இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார்.
தற்போது இவர் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த 12-ம் தேதி வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் டாகு மகாராஜ் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடனமாடியிருந்த 'தபிடி திபிடி' பாடல் மிகவும் வைரலானது. இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றியது பற்றி நடிகை ஊர்வசி ரவுத்தேலா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"பாலகிருஷ்ணா சாருடன் பணியாற்றியது உண்மையிலேயே எனக்கு பெருமையாக இருக்கிறது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் டாகு மகாராஜ். இப்படத்தின் பாடல்களும் அற்புதமான வரவேற்பைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், "என்றார்.